மறைமாவட்டத்திற்கான ஆயரின் கனவுகள்

Vision of the Bishop for the Diocese

 
கனவு 1
புனித அருளானந்தரின் இரத்தத்தால் சிவந்த மண் விசுவாசம்/இறைநம்பிக்கையின் புண்ணிய பூமியாக தொடர்ந்து திகழ வேண்டும். அதற்கு அருட்பணியாளர்கள், இருபால் துறவிகள் ஆகியோரின் எடுத்துக்காட்டான வாழ்வாலும், பொதுநிலை சகோதர சகோதரிகளின் சாட்சிய வாழ்வாலும், சிவகங்கை மறைமாவட்டம் விசுவாசத்திற்கு ஒரு முன் உதாரணமான மறைமாவட்டமாக மாற வேண்டும். 
 
கனவு 2
இறையழத்தலின் விளைநிலமான நமது மறைமாவட்டத்தில் இறையழைத்தல் வெகுவாகக் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. குடும்ப செபமே இறையழைத்தலின் ஊற்று. எனவே எல்லாக்காலங்களிலும் மாலையில் குடும்ப செபம் செபிக்கப்பட வேண்டும். 
 
கனவு 3
புதிய பேராலயம் கட்டப்பட வேண்டும். 
 
கனவு 4
சிவகங்கைச் சீமை என்று அழைக்கப்படும் இந்த சிவகங்கை மண் உண்மையிலேயே இறை ஆசிராலும், பொருளாதார வாழ்வாலும் சிவகங்கை சீமையாக திகழ வேண்டும். அதற்கு ஆண்டுதோறும் பொய்க்காத பருவமழையும், கைவிடாத விவசாயமும் கூடி வரவேண்டும். அவர்களால் அனைத்து மக்களும் உண்ண உணவும், உடுக்க உடையும் பெற வேண்டும். 
 
கனவு 5
சாதி, மத, பேதம் நீங்கி அனைத்து மாந்தரும் ஒரே இறைவனை, தந்தையாக கொண்ட சமத்துவ, சகோதர சமூகம் சிவகங்கை மண்ணில் மலர வேண்டும். 
 
கனவு 6
பிச்சைக்காரர்கள், குறைந்தபட்சம் கத்தோலிக்க பிச்சைக்காரர்கள் இல்லாத மறைமாவட்டமாக நமது மறைமாவட்டம் மாறவேண்டும். 
 
கனவு 7
கடற்கரை வாழ் மீனவ சகோதரர்கள் தங்களுடைய மீன்பிடி தொழிலுக்கு அச்சுறுத்தல் இல்லாது, பயம் இன்றி தொழில் செய்யும் சமூக அரசியல் சூழல் உருவாக வேண்டும். 
 
கனவு 8
பனைத்தொழில் செய்யும் சகோதர, சகோதரிகள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பாதுகாப்போடும், இலாபத்தோடும் தொழில்செய்து வாழ்வில் முன்னேற்ற நிலை உருவாக வேண்டும். 
 
கனவு 9
கிராமங்களில் உணவு பொருள் இருந்தால் சமைத்துக் கொடுக்க ஆள் இல்லாததால் சரியாக உணவு உண்ண இயலாமல் தவிக்கும் முதியவர்களுக்கு உதவி வழங்கும் மதிய உணவுக் கூடங்கள் கிராமங்கள் தோறும் ஏற்படுத்தப்பட வேண்டும். 
 
கனவு 10
பணி ஓய்வு பெற்ற முதிய குருக்கள் விரும்பி வசிக்கும் புதிய இல்லம் எழுப்பப்பட வேண்டும். 

 

back top